திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூருவைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவர் குறும்படங்கள் தயாரிப்பாளர் என்று கூறப்படுகிறது. இவர் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சென்று விட்டு மீண்டும் பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஓடும் காரில் தீ
ஆம்பூர் அருகே அண்ணாநகர் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதை அறிந்த அப்துல் மஜீத் மற்றும் அவரின் நண்பர்கள் இரண்டு பேரும் காரை நிறுத்தி விட்டு உடனடியாக காரிலிருந்து குதித்து இறங்கினர்.
கார் தீப்பிடித்து எரிவதைப் பார்த்த பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
உயிர்த் தப்பினர்
தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால், அப்பகுதி தேசிய நெடுஞ்சாலை முழுவதும் கரும் புகை சூழ்ந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ரசாயன கலவை மற்றும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இதையும் படிங்க: 'எதற்கும் துணிந்தவன்' வால் பேப்பர் புகைப்படங்கள் ரிலீஸ்!