திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரிய வரிகம் ஊராட்சிக்குட்பட்ட மூடப்பட்டிருந்த தனியாருக்குச் சொந்தமான தோல் குடோன் வளாகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்கும், உமராபாத் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள தோல்கள் எரிந்து சேதமானது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அப்பகுதியிலிருந்த மரங்களும் தீ விபத்தால் எரிந்து நாசமானது.
இதையும் படிங்க: ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து - பொருள்கள் எரிந்து நாசம்