தமிழ்நாடு ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள மாநில எல்லை சோதனைச் சாவடியில் பறக்கும் படை வட்டாட்சியர் மற்றும் மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர் நேற்று (ஆக.21) நள்ளிரவு திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா நோக்கி சென்ற TN 31 AE 5175 பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், தமிழ்நாடு ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்திற்க்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
இதனை அடுத்து சுமார் 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரான திண்டிவனம் பகுதியை சேர்ந்த வடிவேலு என்பவரை கைது செய்தனர். பின்னர் பிடிபட்ட ரேஷன் அரிசி வேலூரில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் கைதான வடிவேலு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையில் ஒப்படைக்கப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ஹலோ நான் டிஜிபி பேசுறேன்...போலீஸ் அதிகாரியிடமே 7.5 லட்ச ரூபாய் ஆன்லைனில் மோசடி