திருப்பத்தூர்: ஆம்பூரை அடுத்த கைலாசகிரி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் (செப்.10) மதியம் கோயில் குளத்தில் குளிப்பதற்காகச் சென்ற ஊத்தங்கரை பகுதியைச் ஓட்டுநர் சேர்ந்த லோகேஸ்வரனும் அவரது இரண்டு குழந்தைகளும் குளத்தில் இறங்கிக் குளித்துள்ளனர்.
அப்போது குளித்தின் ஆழமான பகுதிக்குள் சென்று சிக்கியதில் ஜஸ்வந்த் (8), ஹரிப்பிரியா(6) இருவரும் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மனைவியின் விஷத்தை தட்டிவிட்ட கணவர்
இதையடுத்து, குழந்தைகளின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் குழந்தைகளின் தந்தை லோகேஸ்வரன், தாய் மீனாட்சி ஆகியோர் துக்கம் தாங்காமல், நேற்று (செப்.11) ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்தியுள்ளனர்.
தொடர்ந்து, விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்துமுடித்த லோகேஸ்வரன், தனது மனைவி குடித்துக்கொண்டிருந்த விஷம் கலந்த குளிர்பானத்தை கீழே தட்டியுள்ளார். இதனால், சுதாரித்துக்கொண்ட அவரது மனைவி மீனாட்சி உடனடியாக அக்கம்பக்கத்தினரை அழைத்து லோகேஸ்வரனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அடுத்தடுத்து சோகம்
இந்நிலையில், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட லோகேஸ்வரன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விஷம் அருந்திய குளிர்பானத்தை குடிக்க முயன்ற மீனாட்சியும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஆம்பூர் அருகே குழந்தைகள் இறந்த துக்கத்தில் தந்தை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.