ETV Bharat / state

பிரபல பெண் கள்ளச்சாராய வியாபாரி கைது - 21 கிலோ கஞ்சா, ரூ.20 லட்சம் பறிமுதல்! - Police take action

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையின் போது பிரபல பெண் கள்ளச்சாராய வியாபாரியிடமிருந்து 21 கிலோ கஞ்சா, ரூ.20 லட்சம் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

famous-woman-trafficker-arrested
famous-woman-trafficker-arrested
author img

By

Published : May 19, 2020, 7:16 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரில் வசித்து வருபவர் பிரபல கள்ளச்சாராய வியாபாரி மகேஸ்வரி. இவர் கடந்த பல ஆண்டுகளாக கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். கள்ளச்சாராய வழக்கில் பல முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தும், மிக எளிதில் வெளியில் வந்து விடுகிறார்.

இதனால் அப்பகுதியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாமல், சமீப காலமாக காவல் துறையினர் திணறி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், நள்ளிரவில் மகேஸ்வரி வீட்டைச் சுற்றி வளைத்தனர். அப்போது கள்ளச்சாராய கும்பலை காவல் துறையினர் கைது செய்ய முற்பட்டபோது, ஏற்பட்ட தாக்குதலில் பெண் காவலர் சூர்யா என்பவர் காயமடைந்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பணம்
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள பணம்

அதன்பின் மகேஸ்வரி, சீனிவாசன், காவியா உட்பட ஏழு பேரைக் கைது செய்த காவல் துறையினர், மகேஸ்வரியின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ கஞ்சா, ரூ.20 லட்சம் ரொக்கம், 3 இருசக்கர வாகனங்ளைப் பறிமுதல் செய்தனர்.

பின் கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 20 கிலோ அளவிலான கஞ்சா

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறுகையில், 'மகேஸ்வரி கஞ்சா தொழில் செய்து பெருமளவு பணம் சம்பாதித்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் மூலம் நிறைய சொத்துகளையும் வாங்கி உள்ளார். கஞ்சா விற்பனை மூலம் சம்பாதித்த சொத்துகள் குறித்து கணக்கு எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது வரையில் சுமார் 40 அசையா சொத்துகளின் ஆவணங்கள் எடுக்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம்: இரு தரப்பு மோதலில் 10 பேர் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.