திருப்பத்தூர்:வாணியம்பாடி சித்திகாபாத் பகுதியிலுள்ள சில்லரை கடைகளில் காவல்துறை பிரிவு செய்தியாளர்கள் எனக்கூறி இரண்டு நபர்கள் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுவது குறித்து சோதனை செய்வதாக கூறி வியாபாரிகளிடம் மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
அடுத்தடுத்த கடைகளில் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடவே அப்பகுதி வியாபாரிகள் இருவரையும் மடக்கி பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் சென்ற காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனை தொடர்ந்து வியாபாரிகள் ஒன்று திரண்டு பணம் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மயங்கி விழுந்த இஸ்லாமிய பெண்ணுக்கு உதவிய காவல் துணை கண்காணிப்பாளர்