தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 23) முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடித்து வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் - திருப்பத்தூர் செல்லும் சாலையில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில், ( மெர்குரி ஷுஸ்) ஊரடங்கு உத்தரவை மீறியும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக பேரூராட்சி நிர்வாகத்திற்குத் தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற பேரூராட்சி அலுவலர்கள் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பணி புரியும் தொழிலாளர்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல், முகக் கவசம் அணியாமல் பணிபுரிந்தனர்.
இதனையடுத்து, பேரூராட்சி நிர்வாகமானது, தொழிற்சாலை நிர்வாகத்திற்கு ரூபாய் 5 ஆயிரத்தை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கோவை அரசு மருத்துவமனையில் செயற்கை கால்கள் தயாரிக்கும் மையம் திறப்பு!