திருப்பத்தூர் மாவட்டம்: செட்டியப்பனூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை ரகுநாதன் செயலாளராகவும், ராமலிங்கம் உதவி செயலாளராகவும் பதவி வகித்து உள்ளனர். அந்த காலகட்டத்தில் இவர்கள் போலி ஆவணங்களைத் தயாரித்து பலருக்கு பயிர் கடன் வழங்கியது போல் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது.
இது தொடர்பாக அப்போதைய திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்து உள்ளார். அதன் பெயரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த வழக்கு விசாரணையின் போது போலி ஆவணங்கள் மூலம் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் முறைகேடு நடந்து உள்ளது என்பது தெரிய வந்தது. இந்த வழக்கு வேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அரசு வழக்கறிஞராக இந்திரா மிசையல் வாதாடினார். மேலும் இந்த வழக்கு மோசடிகளுக்கு ஏற்ப பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில் ‘12 லட்சத்து 47 ஆயிரம் மோசடி செய்ததாக நடந்த வழக்கில் வேலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திருமால் தீர்ப்பு அளித்தார். அதில் ரகுநாதன், ராமலிங்கம் ஆகியோருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் அபராதத் தொகையாக தலா 22 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்’ விதித்து தீர்ப்பு அளித்தார்.
இதையும் படிங்க: சட்ட விரோத மணல் கடத்தல் புகார் - அரசுக்கு மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை!