திருப்பத்தூர்: காட்பாடி ரயில் நிலையத்திற்கு ஜார்க்கண்ட மாநிலம் தன்பாத் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் விரைவு ரயில் நேற்று (ஜூலை 02) வந்தது. அப்போது, சேலம் உட்கோட்ட ரயில்வே காவல் துறையினர் ரயிலில் சோதனை செய்தனர்.
அப்போது முன்பதிவு செய்யப்பட்ட டி 4 பெட்டியில் கழிவறை அருகே இருந்த பைகளை காவல் துறையினர் சோதனை செய்தபோது, அதனுள் 11 பண்டல்களில் 11 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பார்சல்களை இன்று (ஜூலை 03) அதிகாலை ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ரயிலில் கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் ரூ.98.55 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்