ETV Bharat / state

தேர்தல் பரப்புரையில் சிறுவர்களை ஈடுப்படுத்திய எஸ்டிபிஐ கட்சி மீது வழக்கு! - election violation case file against sdpi party in tirupattur news

திருப்பத்தூர்: ஆம்பூரில், தேர்தல் விதிமுறைகளை மீறி சிறுவர்களை பரப்புரையில் ஈடுபடுத்திய எஸ்டிபிஐ கட்சியினர்மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Sdpi children canvased case file
Sdpi children canvased case file
author img

By

Published : Mar 23, 2021, 1:33 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில், அமமுக கூட்டணிக் கட்சியான சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் (எஸ்டிபிஐ) வேட்பாளராக சென்னை, பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த உமர் பாரூக் அறிவிக்கப்பட்டுள்ளார்.

உமர் பாரூக்குக்கு ஆதரவாக நேற்று (மார்ச்.22) ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பரப்புரையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, விதிமுறைகளை மீறி தேர்தல் பரப்புரையில் சிறுவர்களை ஈடுபடுத்தியது தொடர்பாக கிராம உதவி அலுவலர் பாபு புகார் அளித்தார்.

இந்நிலையில், புகாரின் பேரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த ஆம்பூர் தொகுதி பொறுப்பாளர் முகமது பாஷா ஜிலான் என்பவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க...’பதவி சுகம் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்றார்’ - ஆ.ராசா தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.