ஆம்பூரில் தேர்தல் விதிமுறையை மீறி தேர்தல் புறக்கணிப்பு என நோட்டீஸ் வெளியிட்ட அச்சக உரிமையாளர், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் உள்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நோட்டீஸ் அச்சடித்த அச்சகத்திற்கு சீல்வைத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பாதாள சாக்கடைத் திட்டத்தின்கீழ் ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பு நோட்டீஸ் அச்சடித்ததால் தேர்தல் விதிமுறையை மீறியதாக முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சுரேஷ்பாபு, சாம்சன், மணிகண்டன் மீது பல பிரிவுகளின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரஸ் பூட்டி சீல்வைத்து ஆம்பூர் நகர காவல் துறையினர் நோட்டீஸ் டிசைன் செய்த நிலா பிரிண்டர்ஸ், அச்சடித்த கருணா பிரிண்டிங் பிரஸ் பூட்டி சீல்வைத்து ஆம்பூர் நகர காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.