வேலூர் மாநகராட்சி மண்டலம் -1 இல் காட்பாடி பகுதிகளில் பயணியர் நிழற்குடை, நியாயவிலை கட்டடம் உள்ளிட்டவற்றை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
பின்னர் நாடாளுமன்றத்தில் நாங்கள் சொல்வதை திமுக எம்.பி.க்கள் கேட்க மறுக்கிறார்கள் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்கள் சொல்வதை கேட்க நாங்கள் அங்க போகலை, நாங்கள் (எம்.பி.க்கள்) சொல்வதை கேட்க தான் அவர்கள் அமைச்சர்களாக உள்ளனர் என கூறினார்.
மேலும் காவேரி - குண்டாறு இணைப்பு குறித்து தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தில் இடம்பெறவில்லை. இருந்த போதும் மாயனூர் முதல் புதுக்கோட்டை வரை கால்வாய் வெட்டி வருகிறோம் என்றார்.
முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு நீர் திறக்கப்பட்டிருப்பது குறித்து கேட்டதற்கு, முல்லை பெரியாரில் தற்போது 137 அடிக்கு நீர் இருந்த போதிலும் மழை காரணமாக அளவுக்கு அதிகமாக நீர் வரத்து உள்ளதால் அதை கேரளாவுக்கு திறந்துவிட்டுள்ளோம். அதனால் நமக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'ஆளுநரிடம் அரசியல் பேசினேன், ஆனால்...' - ரஜினி