திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் இன்று (அக்டோபர் 11) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பினை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹா விடுத்துள்ளார்.