ETV Bharat / state

ஆம்பூர் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினர் மீது தாக்குதல்.. நடந்தது என்ன? - DMK member

ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த 12ஆவது வார்டு உறுப்பினரை அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச்செயலாளரின் மகன் சரமாரியாக தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

dmk person injury
திமுக உறுப்பினருக்கு அடி, உதை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 12:15 PM IST

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் துத்திப்பட்டு ஊராட்சியின் 12ஆவது வார்டு உறுப்பினராக உள்ளார். திமுகவில் உறுப்பினராகவும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளரான சாந்தராஜ் என்பவருக்கும் குமரேசனுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் குமரேசன் துத்திப்பட்டு பகுதியில் தனது நண்பர்களுடன் இருந்த போது, அங்கு வந்த சாந்தராஜின் மகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குமரேசனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து குமரேசனை மீட்ட நண்பர்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வார்டு உறுப்பினர் குமரேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மதுப்பழக்கத்திற்கு அடிமையான மகன்; கூலிப்படை வைத்து கொலை செய்த பெற்றோர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.