ETV Bharat / state

'தேர்தல் வருவதால் வாய்க்கு வந்ததையெல்லாம் கூறுகிறார் முதலமைச்சர்' - திமுக எம்.பி தயாநிதி மாறன்

திருப்பத்தூர்: தேர்தல் வருவதால், வாய்க்கு வந்ததையெல்லாம் முதலமைச்சர் கூறி வருகிறார் என திமுக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

dhayanithi maran
தயாநிதி மாறன்
author img

By

Published : Feb 26, 2021, 3:07 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில், இன்று(பிப்.25) காலை முதல் வாணியம்பாடியில் உள்ள பல்வேறு பகுதிகளில் திமுக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்

அதன் முதல் பகுதியாக, வாணியம்பாடியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, இஸ்லாமிய ஆண்கள் கலைக்கல்லூரியில் மாணவர்களுடன் கலைந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது, திமுக ஆட்சிக்கு வந்ததும் வாணியம்பாடியில் மிகப்பெரிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என மாணவர்களிடையே உறுதியளித்தார்..

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்

தொடர்ந்து, ராமநாயக்கன் பேட்டையில் ஊதுவத்தி செய்யும் தொழிலாளர்கள், தேங்காய் தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார். பின்பு மாலையில் வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலை அதிபர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பேசிய அவர், " 200 தொகுதிக்கு மேல் ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று நினைத்திருந்தோம் ஆனால், தமிழ்நாட்டு மக்களின் உணர்வைப் பார்க்கும் போது 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். மத்திய அரசும், மாநில அரசும் பெட்ரோல், டீசல் விலையை 30 ரூபாய்க்கு விற்காமல், கூடுதலாக 63 ரூபாய் வரிச்சுமையை மக்கள் மீது சுமத்திவிட்டு கவலைப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது. ஸ்டாலின் வந்தவுடன் வரிச்சுமை குறைக்கப்படும்.

தயாநிதி மாறன் செய்தியாளர் சந்திப்பு

ஒருவார காலத்தில் தேர்தல் அறிவிக்கும் நிலையில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்று முதலமைச்சர் வாய்க்கு வந்ததையெல்லாம் கூறுகிறார்.

தேர்தல் நடத்தாமலேயே வெற்றி பெற்றதாக அவரே அறிவிப்பார்.ஜெயலலிதாவின் படத்திற்கு மோடி மலர் தூவி மரியாதை செலுத்துவது தவறான செயல். மேற்கு வங்கத்திலும், புதுச்சேரியிலும், எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கியது பாஜக ஊழல் கட்சி என்பதை தெளிவுபடுத்துகிறது.

தேர்தல் வந்தவுடன் தமிழ்நாட்டைப் பற்றி கவலைப்படுவதுபோல், அடுக்குமொழியில் திருக்குறளையும், ஔவையார் பற்றியும் பேசுகிறார் மோடி. ஆனால், 2019 ஆம் ஆண்டு தமிழ்மொழிக்கு அந்தஸ்து வேண்டும் எனக் கேட்டிருந்தோம், 10 கோடி மட்டுமே தமிழுக்கு ஒதுக்கீடு செய்து 680 கோடியைச் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கீடு செய்தார்.தேர்தல் வந்தவுடன் மோடி நடிப்பார் அதன்பிறகு தமிழ்நாட்டை கண்டுகொள்ளமாட்டார். தமிழ் மக்களை மோடி ஏமாற்றி வருகிறார். மேலும் சாகும் போது சங்கரா சங்கரா என்பது போல் தேர்தல் வந்தவுடன் வாக்குறுதிகளை அதிமுகவினர் அளிக்கின்றனர். தமிழ் மக்கள் இனி ஏமாறமாட்டார்கள்" என்றார்.

இதையும் படிங்க: கட்சிகள் கவனிக்க: ’தேர்தல் அறிக்கையில் குழந்தைகள் உரிமை’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.