ETV Bharat / state

ஊராட்சி பிரச்னை குறித்து புகார்... மநீம பிரமுகருக்கு கொலை மிரட்டல் - ஆம்பூர்

திருப்பத்தூரில் ஊராட்சி பிரச்னைகள் குறித்து, அரசு அலுவலர்களுக்கு புகார் அனுப்பிய மக்கள் நீதி மய்யம் ஒன்றியச் செயலாளருக்கு ஊராட்சி மன்றத் தலைவர் கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் பிரமுகர் முபாரக் அலி அளித்த பேட்டி

author img

By

Published : Nov 16, 2022, 10:41 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த முபாரக் அலி என்பவர், மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாதனூர் ஒன்றியச் செயலாளராக உள்ளார்.

இந்நிலையில் முபாரக் அலி தான் வசிக்கும் பெரியாங்குப்பம் 4-வது வார்டு பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது எனவும்; பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் சரிவர இயக்கப்படாமல் இருக்கிறது என்றும், இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் எனவும் சமூக வலைதளங்களின் மூலம் அரசு அலுவலர்களுக்கு புகார் அளித்துள்ளார்.

முபாரக் அலி அளித்த புகார்
முபாரக் அலி அளித்த புகார்

இந்நிலையில் புகார் குறித்து அறிந்த பெரியாங்குப்பம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ரவீந்திரன் தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக முபாரக் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் பேரில் இந்நிகழ்வு குறித்து ஆம்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் நீதி மய்ய பிரமுகர் முபாரக் அலி அளித்த பேட்டி

இதையும் படிங்க: நில அபகரிப்பு விவகாரம் - கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.