சமீபத்தில் வெளியான தினமலர் நாளிதழில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரை கேலி செய்யும் விதமாக கார்ட்டூன் வெளியிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து கொதித்தெழுந்த கட்சி நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தினமலர் நாளிதழ் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் நிலையங்களில் புகாரளித்தும் வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர தேமுதிக சார்பில், தினமலர் நாளிதழில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மகளிரணி தலைவி பிரேமலதா ஆகியோரை சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்டதற்காகக் கண்டித்து நகர காவல் நிலையத்தின் முன்பாக திரண்ட தேதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தினமலர் நாளிதழை தீயிட்டு எரித்து எதிர்ப்பை காட்டினர். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் சார்பில் தினமலர் நாளிதழ் மீது புகார் அளிக்கப்பட்டது.