ETV Bharat / state

'வேல் யாத்திரை தடையால் வேதனை; பாஜக முடிவை ஆதரிப்பது அதிமுகவின் கடமை' - cp radhakrishnan

திருப்பத்தூர்: வேல் யாத்திரைக்கு அதிமுக அரசு அனுமதிக்காததது வேதனையளிப்பதாகக் கூறிய சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக எடுக்கும் முடிவுக்கு கூட்டணியில் இருக்கும் அதிமுக ஆதரவு அளிப்பது கடமை என்று தெரிவித்துள்ளார்.

cp radhakrishnan
cp radhakrishnan
author img

By

Published : Nov 10, 2020, 7:08 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் தடையை மீறி பாஜக முன்னாள் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணன், “தமிழரின் கலாசாரத்தைப் பரப்புவதற்காகத்தான் வேல் யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சர் மேட்டுப்பாளையம், திருப்பூர் ஆகிய இடங்களுக்குச் செல்லும்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போதெல்லாம் பரவாத கரானா வேல் யாத்திரை நடக்கும்போது பரவும் என்று கூறுவது வேதனையாக உள்ளது.

பாஜக-அதிமுக கூட்டணியில் உள்ளது. கூட்டணியிலுள்ள ஒரு கட்சி முடிவு எடுக்கும்போது, அதனைக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் ஆதரிக்க வேண்டியது கடமை. அரசு யாத்திரைக்கு தடை விதித்தாலும் தொடர்ந்து யாத்திரை நடைபெறும்.

சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி
தற்போது வேல் யாத்திரை செய்வதன் மூலம் பாஜகவினர் கைது செய்யப்படுவதால், தமிழ்நாட்டில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளது. கந்தசஷ்டி கவசத்தை சிலர் அவதூறாகப் பேசினார்கள். திமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட எந்தக் கட்சிகளும் முன்வரவில்லை. இருந்தபோதிலும் அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது கந்தசஷ்டி கவசத்தை அவதூறாகப் பேசியவர்கள் அமைதியாக உள்ளனர்.மனுஸ்மிருதி என்று இல்லாத ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெரிதுபடுத்தியது. இதனால் அக்கட்சியுடன் கூட்டணியிலுள்ள திமுக தான் பாதிக்கும். இதனால் வரும் தேர்தலில் திமுக பெரும் தோல்வியைச் சந்திக்கும்” என்றார்.

இதையும் படிங்க: 'தாமரையை வீழ்த்தும் சக்தியாக முடியாது; திருமாவளவன் பாஜகவில் இணையும் நாள் வரும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.