தமிழ்நாட்டில் இன்று (செப்.13) ஒரே நாளில் 5,693 பேருக்கு கரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,02,792ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று புதியதாக 65 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3701ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் 3,136 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிய நிலையில், 73 பேர் உயிரிழந்தனர்.