தமிழ்நாட்டில் இன்று (செப். 26) ஒரேநாளில் ஐந்தாயிரத்து 647 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 75 ஆயிரத்து 17ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக மேலும் 67 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 702 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மாவட்டத்தில் இதுவரை நான்காயிரத்து 33 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், 583 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதேபோல் 86 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுவரை மாவட்டத்தில் 81 ஆயிரத்து 980 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆயிரத்து 83 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். மேலும் மூன்றாயிரத்து 508 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பள்ளி மாணவியை கடத்த முயன்ற திமுக நிர்வாகி!