தமிழ்நாட்டில் இன்று (செப். 22) ஒரேநாளில் ஐந்தாயிரத்து 337 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 52 ஆயிரத்து 674ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 57 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 440 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே மாவட்டத்தில் மூன்றாயிரத்து 718 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் 71 ஆயிரத்து 197 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இரண்டாயிரத்து 124 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.