தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தேவாலயங்கள், மசூதிகள், திருமணங்களுக்கு கடுமையான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் நிகழ்வாக இருந்தால் முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி பெற்று இருக்க வேண்டும். குறிப்பாக அரசியல் கூட்டங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நடைபெற அனுமதிக்கக் கூடாது.
அதுபோல சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களையோ அல்லது சுயேச்சை வேட்பாளர்களையோ பேசவோ, பரப்புரை செய்யவோ அனுமதிக்கக் கூடாது.
எந்த ஒரு மதத்தின் பெயராலும், குருக்களும் அல்லது பொறுப்பாளர்களும் வாக்களிக்கவோ, வாக்களிக்கக் கூடாது என்றோ பொதுவெளியில் அறிக்கை விடக்கூடாது என்றார்.
இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்தும், இவற்றையெல்லாம் மீறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தேர்தல் 2021: மரக்காணம் அருகே 1 லட்சம் ரூபாய் பறிமுதல்