ETV Bharat / state

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! - Thirupattur dist news

திருப்பத்தூர்: ஆம்பூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Cleaning workers protest by emphasizing various demands!

author img

By

Published : Jan 13, 2021, 11:54 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் நேற்று (ஜன.12) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், அனைத்து தொழிலாளர்களுக்கும் இ.எஸ்.ஐ அமல்படுத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும் எனவும், தூய்மைப் பணியாளர்களுக்கு தூய்மை பணியின்போது உரிய கையுறை, காலுறை, ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், மாதச் சம்பளம் வழங்கும்போது அதற்கான ரசீதும் சம்பள பட்டியலும் சேர்த்து வழங்க வேண்டும்.

தூய்மைப் பணிபுரியும் ஒப்பந்ததாரர்கள், பணி காலத்தில் இறந்துபோனால் அவர்களது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: சேலம் உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை மிகுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.