ETV Bharat / state

மணல் கடத்தலுக்கு லஞ்சம் ; வீடியோ எடுத்த கடத்தல்காரர்களின் மண்டை உடைப்பு - வீடியோ

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலுக்கு அனுமதி வாங்க லஞ்சம் வழங்கியதை வீடியோ எடுத்தது தொடர்பான விவகாரம் தொடர்பாக ஏற்பட்டு மோதலில் 4 பேர் மண்டை உடைந்தது.

மணல் கடத்தலுக்கு லஞ்சம் வாங்கி அனுமதி; வீடியோ எடுத்த கடத்தல்காரர்களின் மண்டை உடைப்பு

author img

By

Published : Aug 6, 2022, 3:52 PM IST

Updated : Aug 6, 2022, 4:07 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த அம்பலூரை சேர்ந்தவர்கள் அஜித் (25) மற்றும் அரசு (26). இவர்கள் சில நாட்களுக்கு முன்பு அம்பலூர் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் கஸ்தூரியிடம் மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு அந்த பகுதியில் உள்ள பாலாற்றில் மணல் கடத்தி வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், மணல் வியாபாரம் துவங்கிய 10 நாட்களில் இவர்களுக்கு சொந்தமான மணல் கடத்தல் வாகனத்தை, கிராம நிர்வாகத்தினர் சிறை பிடித்து 50 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டதாகவும், இதில் உடன்படாத மணல் கடத்தல்காரர்கள் இறுதியாக 25 ஆயிரம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு முதல் தவனையாக ரூபாய் 10 ஆயிரத்தை கொடுத்துள்ளனர்.

மணல் கடத்தலுக்கு லஞ்சம் வாங்கி அனுமதி; வீடியோ எடுத்த கடத்தல்காரர்களின் மண்டை உடைப்பு

10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பெற்றுக் கொண்ட கிராம அலுவலரின் உதவியாளர் கஸ்தூரி, மீதமுள்ள 15 ஆயிரம் ரூபாய்காக மணல் கடத்தல்காரர்களின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மணல் கடத்தல்காரர்கள், மேலும் 15 ஆயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்துவிட்டு செல்போனை மீட்டு வந்துள்ளனர். அந்த சமயத்தில், பணம் கொடுத்ததை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இதனை அறிந்த கஸ்தூரி மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரை இரு சக்கர வாகனத்தில் அமரவைத்து பணத்தை பெற வைத்து சிறிது தூரம் சென்றதும் பணத்தை அவரிடம் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் கஸ்தூரி பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த கிராம நிர்வாக உதவியாளரின் மகன்கள் இருவர், மணல் கடத்தல்காரர்களை புத்துகோவில் பகுதியில் நேற்று இரவு நேரில் சந்தித்து கஸ்தூரி லஞ்சம் வாங்கிய வீடியோ குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

4 பேருக்கும் வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் கஸ்தூரியின் மகன்கள் இருவரும் மணல் கடத்தல் இளைஞர்கள் அரசு மற்றும் அஜித்தை பலமாக தலைப்பகுதி மற்றும் உடல் முழுவதும் அடித்து உதைத்து மண்டையை உடைத்துள்ளனர். நிலைகுலைந்து மயங்கி விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதே போல் மணல் கடத்தல்காரர்கள் தாக்கியதில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளரின் மகன்கள் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த அம்பலூர் காவல் துறையினர் இருதரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் மணல் கடத்தலை சேர்ந்த நபரிடம் பணம் பெற்றுக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிங்க: ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு - திருப்பத்தூர் கல்லூரி மாணவர் கைது!

Last Updated : Aug 6, 2022, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.