ETV Bharat / state

ஜோலார்பேட்டையில் 2 வயது குழந்தை இறப்பு - போலீஸ் விசாரணை

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்மான முறையில் குழந்தை இறப்பு  திருப்பத்தூரில் குழந்தை இறப்பு  போலீஸ் விசாரணை  Child Death In Thirupattur  Child Death  Thirupattur Death Cases
Child Suspect Dead
author img

By

Published : May 19, 2020, 8:06 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள இதயம் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(21). இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாவண்யா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இரண்டு வயதில் சவினா என்ற பெண் குழந்தை இருந்தது.

இதனிடையே, லாவண்யா தொடர்ந்து சில மாதங்களாக தனிக்குடித்தனம் செல்ல பலமுறை சக்திவேலை வற்புறுத்தியுள்ளார். ஆனால் சக்திவேல் தனது தாய் மட்டுமே இருப்பதால் அவரை பிரிந்து வரமுடியாது எனக் கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன் லாவண்யா தனது தாய் வீட்டிற்கு 2 வயது குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். அதன்பிறகு லாவண்யாவும் வேறு ஒருவரும் திருமணம் செய்து கொண்டாதாக தெரிகிறது. இதனால், சக்திவேல் தனது குழந்தையை கொடுக்கும் படி கூறியுள்ளார். ஆனால் லாவண்யா குழந்தையை கொடுக்க மறுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (மே 18) இரவு 11 மணி அளவில் லாவண்யாவும், அவரது தாயாரும் ஜோலார்பேட்டைக்கு வாகனத்தில் வந்து குழுந்தை இறந்துவிட்டதாகக் கூறி சக்திவேலிடம் கொடுத்துச் சென்றுள்ளானர். அப்போது, குழந்தையின் முகம், கழுத்து, கால் உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த சக்திவேல் ஜோலார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, காவல் துறையினர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:குரங்குகள் இறப்பு - வனத்துறையினர் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.