உலகையே அச்சுறுத்தி வரும் 'கொரோனா வைரஸ்' கோழிக்கறிச் சாப்பிடுவதால் பரவுகிறது என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது. இதன் காரணமாக பெரும்பான்மையான மக்கள் கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்த்துவிட்டனர். இதனால், நாடு முழுவதும் கோழிக்கறி விலை கடுமையாக சரிவடைந்து கோழிக்கடைகள் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உமர் சாலையில் பகுதியில் ஆம்பூர் சிக்கன் சென்டர் என்ற பெயரில் கோழிக்கறிக் கடை நடத்தி வருபவர் உமாசங்கர். இவரது கடையிலும் வியாபாரம் முற்றிலுமாக தோய்வுற்றது.
இந்நிலையில், வியாபாரத்தைப் பெருக்கவும் 'கொரோனா வைரஸ்' கோழிக்கறி உண்பதால் பரவுவதில்லை என்பதை விழிப்புணர்வு செய்யும் வகையில் சாந்தி சிக்கன், ஆம்பூர் சிக்கன் சென்டர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் இலவசமாகச் சிக்கன் பிரியாணியும், சிக்கன் 65-யும் வழங்கப்படும் என விளம்பரப் படுத்தினார்.
இதையடுத்து, பொதுமக்கள் வதந்தியை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து இலவசாமாகச் சிக்கன் பிரியாணி, சிக்கன் 65-யும் வாங்கிச் சுவைத்து சென்றனர்.
இதையும் படிங்க: கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வரும்: வதந்தியை கிளப்பியவர் கைது!