ETV Bharat / state

திருப்பத்தூர் வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி - செஸ் ஒலிம்பியாட்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்த 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஜோதி. மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா வரவேற்று பெற்றுக் கொண்டார்.

திருப்பத்தூர் வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி

author img

By

Published : Jul 25, 2022, 10:26 PM IST

திருப்பத்தூர்: 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற 28ஆம் தேதி சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களைக் கடந்து 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் ஜோதி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஜோதியை வரவேற்று பெற்றுக் கொண்டார்.

உலகம் முழுவதும் 188 நாடுகள் பங்கேற்கும் 44 ஆவது சர்வதேச செஸ் போட்டியில் முதன்முறையாக இந்தியா பங்கேற்கிறது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் இப்போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில தினங்களாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள் வருகின்ற 28ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதனை தொடர்ந்து கோயம்புத்தூரில் இருந்து எடுத்துவரப்பட்ட 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஜோதியை திருப்பத்தூர் திட்ட இயக்குனர் செல்வராசு எடுத்துவர, மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹா அதை வரவேற்றுப் பெற்றுக் கொண்டார்.

திருப்பத்தூர் வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி

பின்பு ஜோதியுடன் துறை சார்ந்த அதிகாரிகளும் மாவட்ட ஆட்சித் தலைவர் மைதானத்தில் சுற்றி வந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் ஜோதி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி மாவட்ட ஆட்சித்தலைவரின் நேரடி உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர் முத்தையன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடக்க விழா- கிராண்ட் மாஸ்டர், சியாம் சுந்தரிடம் ஜோதி ஒப்படைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.