ETV Bharat / state

செல்போன் திருடியவருக்கு அடிகொடுத்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்! - செல்போன் திருடியவருக்கு அடிகொடுத்த பொதுமக்கள்

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் செல்போன் பறித்துவிட்டு தப்பியோடிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

cell_phone_snatched_person_catched_by_public

author img

By

Published : Aug 21, 2020, 7:31 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியை சேர்ந்த நண்பர்கள் பைசல் அஹமத் மற்றும் அப்ரோஸ் கான். இவர்கள் நியூ டவுன் பைபாஸ் சாலையில் உள்ள தேநீர் கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கே வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் பைசல் அஹமத் வைத்திருந்த செல்போனை பிடிங்கிக் கொண்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பைசல் அஹமத் மற்றும் அப்ரோஸ் கான் செல்போன் திருடியவர்களை பின் தொடர்ந்து ஓடினர். அப்போது காதர்பேட்டை பகுதியில் திருடிவிட்டு ஓடியவர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து பைசல் அஹமத் அளித்த புகாரின்பேரில் நகர காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் செல்போன் பறித்த நபர் வாணியம்பாடி சலாமாபாத் பகுதியை சேர்ந்த யூசுப் என்பது தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடிய நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வீடுகளை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில்: வழக்குரைஞர் உட்பட 19 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.