ETV Bharat / state

Watch Video: பட்டப்பகலில் கார் திருட்டு

திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Feb 27, 2022, 9:37 AM IST

car theft incident at thiruppatur
பட்டப்பகலில் கார் திருட்டு

திருப்பத்தூர்: கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட தாயப்பன் நகர் பகுதியில் வசிப்பவர்கள் கலைச்செல்வன் (30), பவித்ரன் (28). சகோதரர்களான இருவரும் பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிகின்றனர். கரோனா நோய்த்தொற்று காரணமாக இருவரும் பெங்களூருவில் இருந்து திருப்பத்தூருக்கு வந்து வீட்டிலிருந்தபடியே தற்போது வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (பிப். 26) இருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கையில், பவித்திரனுக்கு சொந்தமான சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை திருடிச் சென்றுள்ளனர். அவர்கள் பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து பூஜை அறையிலிருந்த காரின் சாவியை எடுத்து அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்துச்சென்றது தெரியவந்தது.

Watch Video: பட்டப்பகலில் கார் திருட்டு

இதை, அறியாமல் சிறிதுநேரம் கழித்து வெளியே வந்து பார்த்த பவித்திரன், கார் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து கந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல் துறையினர், கார் திருட்டு சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜவுளி உற்பத்தியாளர் வீட்டில் திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.