திருப்பத்தூர்: வாணியாம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்துவருபவர் மகேஷ்வரி.
இவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ள நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக வாணியம்பாடி நேதாஜி நகர்ப் பகுதியில் உள்ள ஓர் வீட்டில் இருந்து 70-க்கும் மேற்பட்ட சாராய மூட்டைகளை அப்பகுதிகளில் பறிமுதல்செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், பிரபல சாராயம் மற்றும் கஞ்சா வியாபாரியான மகேஷ்வரியை கைது செய்யக்கோரி போராட்டத்திலும் ஈடுப்பட்டனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பால கிருஷ்ணன் உத்தரவின் பேரில், வாணியம்பாடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர்.
இந்த நிலையில், நேற்றிரவு(ஏப். 09) திருவண்ணாமலை அருகே மகேஷ்வரி மற்றும் அவரது கூட்டாளிகளான சின்னராஜ், தேவேந்திரன், சீனிவாசன், மோகன், உஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: 'சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி.. வாடிக்கையாளுருக்கு அதிர்ச்சி...'