திருப்பத்தூர் மாவட்டம் கிரிசமுத்திரம் பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முன்னதாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இலக்கை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.70 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: எருது விடும் விழாவில் இளைஞரை இழுத்துச் சென்ற மாடு - வைரல் வீடியோ