ETV Bharat / state

'ஹிந்தி தெரியவில்லை என்றால் கதிர் ஆனந்த் ஏன் நாடாளுமன்றத்திற்குச் செல்லவேண்டும்' - திருப்பத்தூர் செய்திகள்

ஹிந்தி தெரியவில்லை என்றால் ஏன் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த்தை பாஜக மாநில துணைத் தலைவர் நரேந்திரன் விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணை தலைவர் நரேந்திரன்

author img

By

Published : Jun 3, 2022, 9:28 PM IST

திருப்பத்தூர் வீட்டு வசதி வாரியம் அருகே அமைந்துள்ள தனியார் வளாகத்தில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனையை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக பாஜக மாநில துணைத் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் நரேந்திரன், “கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை கட்சி நிகழ்த்தி வருகிறது.

அதன் ஒரு கட்டமாக இந்த பத்திரிகையாளர் சந்திப்பு இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

3 கோடி மக்களுக்கு பிரதம மந்திரி ஆவோஜனா திட்டத்தின் மூலமாக இருக்க இடம், 2024ஆம் ஆண்டிற்குள் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலமாக அனைவருக்கும் குடிநீர், அதேபோன்று அனைவருக்கும் தடையில்லா மின்சாரம், 9 கோடி தாய்மார்களுக்கு இலவச கேஸ் இணைப்பு உள்ளிட்டப் பல்வேறு நலத்திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது தொடர்ந்து இந்தியில் பேசிய சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் எழுப்பிய சர்ச்சைக்கான விளக்கம் குறித்து பத்திரிகையாளர் கேட்டபோது, “மூன்று ஆண்டு காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கதிர்ஆனந்த் ஹிந்தி தெரியவில்லை என்று ஒரு மொழிக்காக பாரத பிரதமரை அவமதிப்பது போல் பேசியது கண்டனத்துக்குரியது.

ஹிந்தி தெரியவில்லை என்றால் ஏன் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும். இங்கேயே அவருடைய தந்தையைப் போல் சட்டப்பேரவையில் இருக்க வேண்டியதுதானே. ஏற்கெனவே இதே போன்று கேவி குப்பம் ஒன்றியத்தலைவர் பேசிய கொச்சையான வார்த்தைகளுக்கு நாங்கள் போராட்டம் நடத்தி விட்டோம். இப்போது கதிர் ஆனந்த். இவர் உடனடியாக மன்னிப்புக்கேட்க வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய போராட்டம் தொடரும்” என்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணை தலைவர் நரேந்திரன்

இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினராக 6 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.