திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து வாணியம்பாடி முழுவதும் சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று முன்தினம் (ஜனவரி 23) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அம்பூர்பேட்டை பகுதியில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை செய்து வந்தவர்களை காவல்துறையினர் பிடித்தனர்.
![வாணியம்பாடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை - 4 பேர் கைது!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14273480_l.jpg)
இதில் ஆம்பூர்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன், துரை ஆறுமுகம், வேங்கையன், வெங்கடேசன் மற்றும் குடியாத்தத்தை சேர்ந்த சுகுமார் ஆகிய 4 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: ரூ.80 ஆயிரம்.. பெற்றக் குழந்தையை விற்ற பாசக்கார தந்தை!