திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தொகுதிக்குள்பட்ட பெரியாங்குப்பம், ஆலங்குப்பம், நாச்சார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென நள்ளிரவில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
இதில், நாச்சார்குப்பம் பகுதியில் வெங்கடேசன், மகேந்திரன், கணேசன் ஆகியோருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், சூறைக்காற்றும் மழையும் பெய்ததில் வேரோடு சாய்ந்தன.
இந்நிலையில், மழையில் சேதமடைந்த வாழை மரங்களுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் பலத்த காற்றுடன் கனமழை: முதியவர் உயிரிழப்பு