திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாட்டூர் பகுதியில் கிராமத்தின் அருகே விவசாய நிலத்தில் வேர்க்கடலை பறித்து கொண்டிருந்த தனது தாய்க்கு சாப்பாடு எடுத்துகொண்டு சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த 14 வயது பள்ளி மாணவியை பட்டப்பகலில் திமுக இளைஞரணி ஊராட்டி அமைப்பாளர் காரில் கடத்த முயன்றுள்ளனர்.
அந்த மாணவி கூச்சலிட்டபோது அப்பகுதி மக்கள் சிலர் அங்கு வந்துள்ளனர். இதனை அறிந்த மிட்டாளம் பகுதியை சேர்ந்த திமுக இளைஞரணி ஊராட்சி அமைப்பாளரும் பிரபல சாராய வியாபாரியுமான அஜித் (என்கின்ற) பாஷா என்பவர் காரில் தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் தாய் லலிதா உமராபாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அஜித்தை தேடி வருகின்றனர். மேலும் இவர், கள்ளத்தனமாக சாராயம் விற்று வந்த வழக்கில் பலமுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் முக்கிய நபரை கொலை செய்ய திட்டம்: ஆறு ரவுடிகள் கைது!