தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. இதன் காரணமாக அரசு முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாகத் தெருவோர நாய்கள் உணவின்றிப் பசியோடு சுற்றித் திரிகின்றன.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழ்நாடு செல்லப்பிராணிகள் வளர்போர் சங்கம் சார்பில் தெருவோர நாய்களுக்கு உணவு கொடுக்க முடிவுசெய்யப்பட்டது.
தொடர்ந்து, அதன் நகரத் தலைவர் இளங்கோவன் தலைமையில் தினமும் 40 கிலோ அரிசி சாதம், கோழிக்கறி சமைத்து கிருஷ்ணாபுரம், சாமியார்மடம், சான்றோர் குப்பம், பேருந்து நிலையம், உமர்சாலை, ரெட்டி தோப்பு ஆகிய பகுதிகளில் சுற்றித் திரியும் தெருவோர நாய்களுக்கு உணவு கொடுக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் 4000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு