ETV Bharat / state

ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டியது - Antiyappanur Stream Reservoir is located 23 kilometers from Tiruppathur

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.

கனமழையின் காரணமாக ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டியது!!

author img

By

Published : Jul 22, 2022, 10:45 PM IST

திருப்பத்தூர்: முக்கிய அணைகளில் ஒன்றாகத் ஆண்டியப்பனூர் நீரோடை தேக்கமாக திகழ்கிறது. திருப்பத்தூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. கொட்டாறு மற்றும் பெரியாறு ஆறுகளுக்குக் குறுக்கே புதியதாகக் கட்டப்பட்டு 2007 ஆம் ஆண்டு ஆண்டியப்பனூரில் டேம் 27.38 கோடி செலவில் திறக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி உள்ளன. திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் பகுதியில் உள்ள ஆண்டியப்பனூர் அணை 8 மீட்டர் உயரம் கொண்டது. தொடர் மழை காரணமாக அணையின் மொத்த கொள்ளளவான 112.2 மில்லியன் கன அடியை எட்டி உள்ளது.

ஆண்டியப்பனூர் அணை

இந்த அணை மூலம் 14 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு, இதன் மூலம் 2,055 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். கால்வாய் மூலம் நேரடியாக 2,970 ஏக்கர் புஞ்சை நிலமும், 2055 ஏக்கர் நஞ்சை நிலமும் என மொத்தம் 5 ஆயிரத்து 25 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும்.

இந்த நிலையில் தற்போது 9-வது முறையாக அணை நிரம்பி மொத்த கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த நீர் சின்னசமுத்திரம், வெள்ளேரி, மாடப்பள்ளி ஏரி வழியாக அங்கிருந்து இரு கிளைகளாக பிரிந்து ஒரு கிளை செலந்தம்பள்ளி, கோனேரிகுப்பம், கம்பளிகுளம், முத்தம்பட்டி, ராட்சமங்கலம், பசலிகுட்டை ஏரி வழியாக சென்று பாம்பாற்றை அடைகிறது. மற்றொரு கிளை கணமந்தூர், புதுக்கோட்டை ஏரி வழியாக திருப்பத்தூர் பெரியேரி நிரம்பி அங்கிருந்து பாம்பாற்றை அடையும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 49 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக தற்போது உதயேந்திரம், பள்ளிப்பட்டு, சிம்மனபுதூர், பொம்மிக்குப்பம், மாடப்பள்ளி, பெருமாபட்டு, விண்ணமங்கலம், பசலிகுட்டைி, துளசிபாய் உள்ளிட்ட 10 ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

இதையும் படிங்க:சென்னை ஐஐடி மற்றும் எம்பசிஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் இடையே ஒப்பந்தம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.