அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதன் மாநிலத் தலைவர் ரமேஷ், ” தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சுமார் 10 ஆயிரம் வாக்காளர்கள் எங்கள் கட்சியில் உள்ளனர். எங்கள் இன மக்களுக்கு தேவையான உள்ஒதுக்கீட்டை எந்த கட்சி பெற்று தருகிறதோ அவர்களுக்கு வரும் தேர்தலில் எங்களுடைய ஆதரவு இருக்கும்.
அவ்வாறு உள் ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்காத பட்சத்தில், அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தனித் தொகுதிகளை தவிர அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று தேர்தலை சந்திப்பது என முடிவெடுத்துள்ளோம் “ என்றார்.
இதையும் படிங்க: டெல்லி விவசாயிகள் போராட்டம்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆதரவு!