திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றுவருகிறது. குறிப்பாக கரோனா வாகனங்களை மாவட்ட காவல் துறையினர் பிரத்யேகமாக வடிவமைத்துள்ளனர்.
இந்த வாகனங்களை கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
இந்த நிலையில் இன்று ஆம்பூர் பேருந்து நிலையத்தில் அந்த வாகனம் மூலம் காவல் துறையின் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் கலந்துகொண்டார். தொடர்ந்து அவர், “பொதுமக்களிடம் முகக்கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.
மேலும் அவர் அரசின் அறிவுரைகளை மாவட்ட மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காணொலி விழிப்புணர்வு வாகனத்தையும் தொடங்கிவைத்தனர். அப்போது காவல்துறை காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தைப் புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!