ETV Bharat / state

சமூக விலகலை கடைப்பிடிக்காத இறைச்சி கடைகளுக்கு சீல் - ambur meat shops without social distance sealed

திருப்பத்தூர்: ஆம்பூரில் இறைச்சிக் கடைகளில் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் கூட்டமாக அலைமோதியதால் ஏழு கடைகளுக்கு வட்டாட்சியர் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது.

ambur meat shops without social distance sealed

author img

By

Published : Mar 30, 2020, 7:25 AM IST

Updated : Mar 30, 2020, 8:33 AM IST

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் அன்றாடத் தேவைகளான காய்கறிகளை வாங்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் கூடுவதை தவிர்க்க பேருந்து நிலையம், பள்ளிக்கூடங்களில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஆம்பூரில் பல்வேறு இடங்களில் தற்காலிக சந்தைகள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதையும் மீறி பாதுகாப்புக் கவசங்கள் ஏதுமின்றி பொதுமக்கள் சந்தைகளுக்கு வந்து செல்கின்றனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மக்கள் இறைச்சி வாங்க முகக்கவசம் ஏதுமின்றி, சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக ஆம்பூர் உமர் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் இறைச்சி கடைகளில் அலைமோதினர்.

இறைச்சி கடைகளுக்கு சீல்

இதையடுத்து உரிய பாதுகாப்பின்றி செயல்படுவதாக ஏழு இறைச்சி கடைகளுக்கு ஆம்பூர் வட்டாட்சியர் செண்பகவள்ளி உத்தரவின் பேரில் அலுவலர்கள் சீல் வைத்தனர்.

இதையும் படிங்க... ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட உணவகத்திற்கு சீல்!

Last Updated : Mar 30, 2020, 8:33 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.