ETV Bharat / state

'நோய்கள் தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது' - அமைச்சர் நிலோபர் கபில் - அமைச்சர் நீலோபர் கபில்

திருப்பத்தூர்: ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை தொடங்கிவைத்த அமைச்சர் நிலோபர் கபில், நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தை தொடங்கிவைத்த அமைச்சர் நீலோபர் கபில்

author img

By

Published : Feb 23, 2020, 3:28 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இன்று 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 14 அதிநவீன வசதிகள் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத்தை மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தை தொடங்கிவைத்த அமைச்சர்கள்

இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பேசிய ஆம்பூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதனுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் வீரமணி, ”இந்த கூட்டம், சட்டசபைக் கூட்டம் போல் மாறிவிட்டது. எதிர்க்கட்சிகள் குறைகளைச் சுட்டிக் காட்டுவதும் அதை ஏற்று ஆளும் கட்சிகள் குறைகளை நிவர்த்தி செய்வதும் காலம் காலமாக நடைபெற்றுவருகிறது.

ஆனால், தற்போது திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் அனைத்தும் நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்கே தெரியும். ஆம்பூர் மருத்துவமனை மீது அதிக அக்கறை உள்ளதால் தான் மருத்துவமனையின் வளர்ச்சிக்கு 18 கோடி ரூபாயை அதிமுக அரசு ஒதுக்கியுள்ளது” என்றார்.

எதிர்க்கட்சிக்குப் பதிலளித்த அமைச்சர் கே.சி. வீரமணி

இவ்விழாவில் பேசிய அமைச்சர் நிலோபர் கபில், ”நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்துவருகிறது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் எந்தவித நோய்களும் வராமல் தடுக்க சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பாகச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது.

நோய்கள் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசிய அமைச்சர் நிலோபர் கபில்

சுகாதாரத்துறை மிகவும் சிறப்பாகச் செயல்படுவதால் தான் குழந்தைகளின் இறப்பு சதவிகிதம் 24 சதவிகிதத்திலிருந்து 16 சதவிகிமாகக் குறைந்துள்ளது” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர்கள், அரசு அலுவலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர் கல்வி பயிலும் மாநிலம் தமிழ்நாடு'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.