கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
நேற்று, பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக, அப்பகுதியிலுள்ள அனைத்து சந்தைகளும் வழக்கம்போல் இயங்கின. கரோனா அச்சறுத்தல் காரணமாக மக்கள் அதிகளவில் திரண்டு தங்களுக்கு தேவையான காய்கறிகளைக் கூட்டம் கூட்டமாக வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில், ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வருவோருக்கு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டு, முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: கோவையில் கட்டாய ஊரடங்கு இல்லை - ஆட்சியர்