முதலமைச்சரைப் பற்றி அவதூறாக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவைக் கைது செய்யக்கோரி நகர செயலாளர் டி.டி. குமார் தலைமையில் திருப்பத்தூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் திருப்பதி , கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'ஆ.ராசாவைக் கைது செய்' - அதிமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்!