தமிழ்நாடு அரசு கிராமப்புற பகுதியில் உள்ள சிறிய கோயில்களுக்கு தளர்வுகள் ஏற்படுத்தி தகுந்த இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய அரசாணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் கிராமப்புறங்களில் அமைந்துள்ள முருகன் திருக்கோயிலில் ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூர் அடுத்த பச்சூர் புகழ்பெற்ற சென்றாய மலை ஆறுப்படை ஶ்ரீ முருகன் ஆலயத்தில் கடந்த 100 வருடங்களுக்கு மேலாக நாட்டறம்பள்ளி, கொத்தூர், பச்சூர், சுண்டம்பட்டி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆடி 1 முதல் விரதம் இருந்து ஆடி கிருத்திகை திருவிழாவைக் கொண்டாடுவர்.
இந்த திருவிழாவில் காவடி, சடல்தேர், மயில் காவடி மற்றும் தங்களது முதுகில் மற்றும் முகத்தில் அலகு குத்திக் கொண்டு ஆலயத்திற்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றுவர். இந்நிலையில், இந்த ஆண்டு நாடு முழுவதும் கரோனா நோய் பரவலால் நோய் தொற்று மேலும் பரவாமலிருக்க அனைத்து ஆலயங்களும் மூடப்பட்டன.
தமிழ்நாடு அரசு கிராமப்புற பகுதியில் உள்ள சிறிய கோயில்கள் திறந்து வழிபடலாம் என்று அறிவித்திருந்தது. இதையொட்டி, கிராமப்புறத்தில் உள்ள முருகன் ஆலயத்திற்குச் சென்று பொதுமக்கள் தகுந்த இடைவெளியுடன் சாமி தரிசம் செய்தனர்.
இதையும் படிங்க:'ஆடி கிருத்திகை' தினத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜைகள்!