திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த ஆதிபெரமனூர் பகுதியைச் சேர்ந்தவர், ஆகாஷ், அஜித். இவர்கள் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்பவருக்கும் ரூ.500 கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. இதன் காரணமாக கடந்த பிப்.4-ம் தேதி அன்று ஆகாஷ் மற்றும் அஜித் அவருடைய நண்பர்கள் ஐந்து பேர் ஆகியோர் கஞ்சா போதையில் அருண் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் அருண் குமார், அவர் மனைவி காவியா மற்றும் தங்கை ஐஸ்வர்யா ஆகிய 3 பேரையும் வெட்டியுள்ளனர். பின்னர் சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பலத்த காயமடைந்த 3 பேரையும் மீட்டு, நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக ஆகாஷ் மற்றும் அஜித் அவருடைய நண்பர்களைத் தேடி வந்த நிலையில், நேற்று ஆகாஷ் (22), அஜித் (22), திருப்பதி (22) ஆகிய 3 பேரையும் நாட்றம்பள்ளி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாட்றம்பள்ளி பகுதிகளில் அதிக அளவு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவயதிலே கஞ்சா அடித்து மாணவர்கள் சீரழிகிறார்கள். இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக கவனத்தில் கொண்டு கஞ்சா விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கவுன்சிலர்கள் அமளி: டெல்லி மேயர் தேர்தல் 3-வது முறையாக ஒத்திவைப்பு!