திருப்பத்தூர்: திமுகவின் ஓராண்டு நிறைவு சாதனை விளக்க பொதுகூட்டம் வாணியம்பாடியில் நகர செயலாளர் சாரதிகுமார் தலைமையில் நேற்று (மே 14) நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இயல்,இசை, நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் உரையாற்றினார். அப்போது மழை பெய்தது. இருப்பினும் சந்திரசேகர் குடை பிடித்தப்படி உரையாற்றினார்.
அப்போது அவர், திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே எதிர்க்கட்சிகள் வாயடைத்து போய் விட்டது. திமுகவை பற்றி குறை கூறிய கமல், சீமான் எங்கே இருக்கிறார்கள் என்றுகூட தெரியவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து டெல்லியே அதிர்கிறது. இந்தியாவில் அதிக இடங்களில் அண்ணா அறிவாலயம் உள்ளது. விரைவில் டெல்லியே அதிரும்படி ஆட்சியை நடத்துவார்.
தமிழ்நாட்டில் மதங்கள் மாறுப்பட்டாலும், சாதிகள் மாறுபட்டாலும் எல்லோரும் ஒன்றாக இருப்போம். இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்வது திராவிட மாடலுக்கு எடுத்துக்காட்டு. அடுத்த 30 ஆண்டுகளுக்கும் திமுகவே ஆட்சி அமைக்கும்" என்றார். இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:திமுக ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் தள்ளிவைப்பு- மழைதான் காரணம்!