ETV Bharat / state

கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு உடந்தையான 4 காவலர்கள்; ஆயுதப்படைக்கு மாற்றம்..! - கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு உடந்தையான 4 காவலர்கள்

திருப்பத்தூரில் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக செயல்பட்ட காவலர்கள் 4 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 5, 2023, 10:22 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கள்ளாச்சாராய கும்பலை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். இந்நிலையில் கள்ளச்சாராய கும்பலுக்கு, காவலர்கள் சிலர் உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

விசாரணையில், திருப்பத்தூர் தாலுகா காவல் நிலைய சிறப்பு எஸ்.எஸ்.ஐ-க்கள் சிவாஜி, வெண்ணிலா, ஏட்டு வசந்தா மற்றும் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவலர் கோபி ஆகியோர் கள்ளச்சாராய கும்பலுக்கு உதவியாக இருந்தது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் 4 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.

காவலர்கள் 4 பேரும் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் இணைந்து, சாராயம் காய்ச்சவும், அதை விற்பனை செய்யவும் உறுதுணையாக இருந்தது அம்பலாகியுள்ளது. இதற்காக, 4 பேரும் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் லஞ்சம் பெற்றுள்ளனர். மேலும், கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை, எஸ்.பி ஆல்பர்ட் ஜான் மேற்கொள்ளும் நடவடிக்கை பற்றி காவலர்கள் 4 பேரும், சாராய வியபாரிகளுக்கு தகவல் தெரிவித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: Odisha Train Accident: 'எதையும் மூடி மறைக்கவில்லை..ஒளிவு மறைவற்ற விசாரணை' - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

இதுகுறித்து எஸ்.பி ஆல்பர்ட் ஜான் கூறுகையில், "தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை தவிர்த்து போலீசார் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறேன். விசாரணையில் உண்மைத் தன்மை இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கடந்த மே மாதம் கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி 23 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், பலியானோர் குடித்தது தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் எனப்படும் விஷச்சாராயம் என்பது தெரியவந்தது.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான வேட்டையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை செய்வோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கொடுத்த பணத்தை திருப்பித்தராத நண்பர்கள்: கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய், மகன் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.