திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு காப்பு காட்டுப்பகுதியில் வனவிலங்குகளுக்கு மின்சாரம் வைத்து சிலர் வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், ஆம்பூர் வனச்சரக அலுவலர் மூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் மாச்சம்பட்டு காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வனப்பகுதியில் காட்டுப்பன்றிக்கு மின்சாரம் வைத்து வேட்டையாடிக் கொண்டிருந்த கூத்தாண்டவர் நகர் பகுதியைச் சேர்ந்த சகாதேவன் (46) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடமிருந்த 6 கிலோ காட்டுப்பன்றி இறைச்சியை பறிமுதல் செய்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.