ETV Bharat / state

வாணியம்பாடியில் ஓர் வள்ளல்.. அரசு மருத்துவமனைக்காக ரூ.25 லட்சம் நிலம் கிஃப்ட்! - vaniyambadi

அரசு சுகாதார நிலையம் அமைக்க அரசு நிலம் இல்லாததால், தனக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்துள்ளார்.

அரசு மருத்துவமனை அமைக்க ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிலம் தானம்

author img

By

Published : Nov 25, 2022, 3:38 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கினார்.

ஆனால் சுகாதார நிலையம் அமைக்க அப்பகுதியில் அரசு நிலம் இல்லாததால் இடம் தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்தது. இந்த நிலையில் துணை சுகாதார நிலையம் அமைக்க அதே கிராமத்தை சேர்ந்த அண்ணபூரணி ராஜ்குமார் குடும்பத்தார் தங்களுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலத்தை துணை சுகாதார நிலையம் கட்டுவதற்காக அரசுக்கு தானமாக வழங்குவதாக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோரிடம் தெரிவித்தனர்.

அதன் பின்னர் இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பொது சுகாதாரத்துறை தானம் செய்து பத்திரப்பதிவு செய்தார். பொதுமக்களின் நலன் கருதி தங்களிடம் இருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய அன்னபூரணி ராஜ்குமார் குடும்பத்தாரை எம்.எல்.ஏ செந்தில்குமார், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி ஆகியோர் நேரில் சென்று சந்தித்து பாராட்டினார்.

இந்த செயலுக்காக ஊர் பொதுமக்கள் அனைவரும் அக்குடும்பத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'நான் தான் டெங்கு; உனக்கு ஊதுவேன் சங்கு' கொசு வேடத்தில் விழிப்புணர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.