திருப்பத்தூர்: மாவட்டத்தில் சிறுமி ஒருவர் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவரை 13 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார்.
சிறுமி கர்ப்பமாகியுள்ளதை அறிந்த தாயார் சிறுவன் மீது உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பின்னர் சிறுவன் 18 வயது நிரம்பாததால் வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் கர்ப்பமடைந்த சிறுமிக்கு குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கருமுட்டை தானம் குறித்து அனைத்து மருத்துவமனைக்கும் வரன்முறை அறிக்கை அனுப்பப்பட உள்ளது'